3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு.! மத்திய அரசுக்கு பரிந்துரை.!
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இடையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது யாரும் எதிர்பாராதவகையில் இரண்டாவது அலை சுனாமி போன்ற தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது நாள்தோறும் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இந்தநிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை, உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. அதாவது 15 சதவீதத்துக்கும் மேல் பரவல் உள்ள 150 மாவட்டங்களில் சில தளர்வுகளை மட்டும் அறிவித்து விட்டு முழுமையான ஊரடங்கை கொண்டுவருவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறைதான் இறுதி முடிவு எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.