மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதலையை நாய்குட்டி போல ஆக்டிவா ஸ்கூட்டரில் அசால்ட்டாக மீட்டுச் சென்ற அதிகாரிகள்; நெட்டிசன்கள் கலாய்.!
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய ஆறுகள், ஏரிகள், அணைகள் நிரம்பி இருக்கின்றன. சில இடங்களில் திடீர் வெள்ளம் மக்களின் இயல்பு வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இதனிடையே, குஜராத் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான மழையானது பெய்து வருகிறது. இதனால் வதோதரா உட்பட பல இடங்களில் வெள்ளம் ஓடுகிறது. பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி இருந்தன. வெள்ளம் புகுந்த இடங்களில் இருந்த மக்கள், மீட்பு படையினர் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், தெருவில் சுற்றிய சிறிய அளவிலான முதலையை மீட்ட வனத்துறை அதிகாரிகள், அதனை ஆளரவமற்ற பகுதியில் உள்ள ஆற்றில் பத்திரமாக கொண்டு சென்று விட்டார். அவர்கள் முதலை மீட்பு சம்பவத்தின்போது, ஆக்டிவா ஸ்கூட்டரில் மிகவும் சாதரணமாக முதலையை நாய்குட்டி போல அழைத்துச்சென்ற காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திருடன் கையில் துப்பாக்கி; துணிச்சல் வழிப்பறி.. டெல்லி நிலையை பார்த்தீங்களா?.!
छोटे मगरमच्छ को ऐक्टिवा में बिठाकर फिर नदी में छोड़ने जा रहे वनकर्मी।#VadodaraFloods #Gujarat #viralvideo pic.twitter.com/dD5yY6hYIW
— Ketan Joshi (CNBC आवाज़) (@imketanjoshi) September 1, 2024
இதையும் படிங்க: நடுரோட்டில் சேர் போட்டு மழையை ரசித்த நபர்; மரண பீதியை கிளப்பிய லாரி ஓட்டுநர்.. தரமான சம்பவம்.!