நடுரோட்டில் சேர் போட்டு மழையை ரசித்த நபர்; மரண பீதியை கிளப்பிய லாரி ஓட்டுநர்.. தரமான சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப்கர்க் மாவட்டம், கோட்வாலி பகுதியில் காவல் நிலைய சோதனைச்சாவடி முன்பு, கொட்டு மழையில் நபர் ஒருவர் சேர் போட்டு நடுரோட்டில் உட்கார்ந்து இருந்தார். அவ்வழியே கார், இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து சென்றுகொண்டு இருந்தன.
லாரி ஓட்டுநர் பகீர் செயல்
நடுரோட்டில் நபர் இருப்பதை பார்த்து, பலரும் நமக்கெதற்கு வம்பு என ஒதுங்கி சென்றனர். இதனிடையே, அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் ஒருவர், நபரை பக்கவாட்டில் எந்தவிதமான காயமும் ஏற்படாத வண்ணம் லேசாக இடித்து சென்றார். லாரி மோதிய வேகத்தில் சேர் உடைந்துபோன நிலையில், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: "அம்மா வீட்டுக்கு போகணும்" - அடம்பிடித்த மனைவியின் மூக்கை அறுத்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்.!
மனநலம் பாதிக்கப்பட்டவர்
இந்த விஷயம் குறித்த காணொளி வெளியாகி வைரலாகவே, கோட்வாலி காவல் துறையினர் நபரை பிடித்து விசாரித்து குடும்பத்திடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மனநலம் சரியில்லாதவர் என்பதால், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மழை பெய்யும்போது நடுரோட்டில் அவர் அமர்ந்து இருந்தாலும், அதனை சோதனை சாவடி அதிகாரிகள் பார்த்துக்கொண்டு இருந்தாலும் ,யாரும் அதனை தடுக்க முன்வரவில்லை. மாறாக லாரி ஓட்டுநர் அவரை இடித்தும் ஜாவோ, ஜாவோ (செல்லுங்கள்) என லாரி ஓட்டுநரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
#Video | Man Sits On Chair In Middle Of UP Road, Gets Hit By Truck https://t.co/hmL0gisbGS pic.twitter.com/bQYczTfhbI
— NDTV (@ndtv) September 1, 2024
இதையும் படிங்க: செல்பி எடுத்து வாட்ஸப்பில் அனுப்பி தம்பதி தற்கொலை.. தற்கொலை குறிப்பில் பகீர் தகவல்.!