தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
எக்ஸ்பிரஸ் இரயிலில் தொடரும் சர்ச்சை.. ரிசர்வேஷன் கோச்சில் தம்பதி மீது கும்பலாக தாக்குதல்.. பகீர் செயல்.!
தொலைதூர ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், தங்களின் இருப்பிடத்தை முன்கூட்டியே பதிவு செய்து பயணம் செய்கின்றனர். இவ்வாறான ரிசர்வேஷன் பெட்டிகளில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினரின் சேவையும் வழங்கப்படும். பொதுப்பெட்டிகளில் காவல்துறையினர் பெரும்பாலும் இருப்பது கிடையாது.
பண்டிகை காலங்கள், வார இறுதி விடுமுறை நாட்களில் பொதுப்பெட்டிகளுக்கான டிக்கெட் எடுத்து பயணிப்போர், அதில் இருக்கும் கூட்ட நெரிசல் காரணமாக முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்வது தொடருகிறது. இவ்வாறாக ஒருவர், இருவர் என அல்லாமல், நூற்றுக்கணக்கில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்வதால், அவர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: உஷார்.. ஓடும் ரயிலில் நொடியில் நேர்ந்த விபத்து.! கீழ் படுக்கையில் உறங்கிய பயணி பரிதாப பலி!!
ரிசர்வேஷன் கோச்சில் ஏறி அட்டகாசம்
அதனை தட்டிக்கேட்கும் பயணிகளிடம் கும்பலாக சேர்ந்து தகராறு செய்வது என சர்ச்சை செயல்கள் தொடருகிறது. இந்நிலையில், ஹவுராவில் இருந்து டெஹ்ராடூன் நோக்கி பயணம் செய்த விரைவு இரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் தம்பதிகள் பயணம் செய்தனர். அச்சமயம், அங்கு வந்த கும்பல் ஒன்று அவர்களின் இருப்பதை கேட்டு தகராறு செய்துள்ளது.
இதற்கு தம்பதிகள் மறுப்பு தெரிவிக்கவே, அங்கு வந்த கும்பல் அவர்களை கடுமையாக தாக்கி இருக்கிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், பயணிகளை காப்பாற்றினார். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் பிற பயணிகளும் பதற்றத்திற்கு உள்ளாகினர். தாக்குதல் சம்பவம் வீடியோ எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.
बिहार : हावड़ा-देहरादून एक्सप्रेस में कोलकाता के दंपति के साथ मारपीट का वीडियो वायरल, कैमूर के कुदरा स्टेशन पर स्लीपर बोगी में अनाधिकृत रूप से बैठने को लेकर हुआ विवाद. pic.twitter.com/mq489sQ8s5
— FirstBiharJharkhand (@firstbiharnews) June 27, 2024
இதையும் படிங்க: ஹைடெக் முறையில், தூக்கி வீசப்பட்டவாறு இரயில் பார்சல் டெலிவரி.. பகீர் வீடியோ வைரல்.!