ஹைடெக் முறையில், தூக்கி வீசப்பட்டவாறு இரயில் பார்சல் டெலிவரி.. பகீர் வீடியோ வைரல்.!



Train Parcel delivery Method in Mumbai Central Railway 

 

இந்தியாவின் மிகப்பெரிய துறையாக கவனிக்கப்படும் இரயில்வே துறை, ஒவ்வொரு மாநிலத்தையும் இணைக்கும் வகையில் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது. தினமும் ரயில்வேயில் பயணம் செய்யும் பயணிகளைப்போல, பார்சல்களும் தங்களின் இலக்கை நோக்கி பயணிக்கின்றன. 

ரயில்களில் அனுப்பப்படும் பார்சல்

பிரதானமான ஊர்களில் இருந்து அனுப்பப்படும் பார்சல் முதல், கிராமங்களுக்கு சென்றடையும் தொலைதூர பார்சல் வரை அனைத்தும் ரயில்களில் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறான பார்சல்களை கையாள பிரதான பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள். 

இதையும் படிங்க: #JustIN: பயணிகள் இரயிலில் பயங்கர தீ விபத்து; பீகாரில் பகீர் சம்பவம்.!

அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில், மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தில், இரயில் பயணிக்கும்போதே அதிலிருந்த பார்சல்களை அலட்சியமாக தூக்கி வீசிச்சென்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி கண்டனத்தை குவிந்துள்ளன. இதுதான் இந்திய இரயில்வேயின் பார்சல்களை கையாளும் செயல்முறையா? எனவும் கண்டன குரல்கள் எழுப்பப்படுகின்றன. 

மும்பை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நடந்த இவ்வாறான சர்ச்சை செயலில், செர்ரி பழங்கள் பாக்ஸ் சேதமடைந்தன. பிற பார்சல்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால், அதன் நிலைமை என்னவாகும் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது.

இதையும் படிங்க: #Breaking: 2 சரக்கு இரயில்கள் மோதி பயங்கர விபத்து; இரயில் ஓட்டுனர்கள் படுகாயம்., பஞ்சாபில் அதிர்ச்சி.!