உஷார்.. ஓடும் ரயிலில் நொடியில் நேர்ந்த விபத்து.! கீழ் படுக்கையில் உறங்கிய பயணி பரிதாப பலி!!



Man dead the middle berth crash in train

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாரஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் 62 வயது நிறைந்த அலிகான். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் எர்ணாகுளம்_ டெல்லிக்கு இடையே இயங்கிவரும் மில்லேனியம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில் கீழ் படுக்கையில் (low berth)ல் படுத்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.

உடைந்து விழுந்த நடுபடுக்கை 

மேலும் அதன் மேல் நடு படுக்கையில் மற்றொரு நபர் ஒருவர் படுத்திருந்துள்ளார். ரயில் தெலுங்கானா மாநிலம் ராமகுண்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நடுவே இருந்த படுக்கை அறுந்து கீழ்படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த அலிகான் மீது விழுந்துள்ளது.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழுத்து எலும்புகள் உடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிந்தநிலையில் அங்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படிங்க: ஹைடெக் முறையில், தூக்கி வீசப்பட்டவாறு இரயில் பார்சல் டெலிவரி.. பகீர் வீடியோ வைரல்.!

train

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 

அவருக்கு மருத்துவமனையில் கழுத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரயில்வே நிர்வாகம் இதுகுறித்து கூறுகையில், அலிகான் மீது விழுந்த இருக்கையை சோதனை மேற்கொண்டதில் அது நல்ல நிலையிலே உள்ளது.

இந்திய ரயில்வே அறிக்கை 

நடு படுக்கை உடைந்து விழவில்லை. அதனை பயணி சங்கிலியில் சரியாக மாட்டாமல் சென்றதால் அது கீழே விழுந்துள்ளது. இதனாலேயே கீழ் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அலிகானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை இந்திய ரயில்வே தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: #JustIN: பயணிகள் இரயிலில் பயங்கர தீ விபத்து; பீகாரில் பகீர் சம்பவம்.!