சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படம் வெளியீடு தேதி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சாலையோர மரத்தில் மோதி துயரம்; 3 பேர் பரிதாப பலி.. அப்பளமாக நொறுங்கிய கார்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம், விடப்படனகல் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகள் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
இந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரம் இருந்த மரத்தின் மீது அதிவேகத்தில் மோதியது.
இதையும் படிங்க: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; 11 பேரின் உயிரை பறித்த சோகம்..!
இந்த சம்பவத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிய நிலையில், காரில் பயணம் செய்த நான்கு பேரில் மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உயிருக்கு போராடிய ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: டயர் வெடித்து சோகம்.. 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்த லாரி.. ஓட்டுநர் பலி.!