Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; 11 பேரின் உயிரை பறித்த சோகம்..!
தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாந்த்ரா நகரில் இருந்து கோண்டியா பகுதிக்கு, நேற்று 20 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது.
இந்த பேருந்து கோண்டியா - அர்ஜுனி சாலையில், பிந்தரவானா கிராமத்திற்கு அருகே சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்தது.
இதையும் படிங்க: டயர் வெடித்து சோகம்.. 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்த லாரி.. ஓட்டுநர் பலி.!
11 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கவாட்டு பகுதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவே, பேருந்தில் பயணம் செய்த 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மீட்புப்பணி
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்தில் மொத்தமாக 11 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் காயத்துடன் சிகிச்சை பெறுகிறார்கள்.
இதையும் படிங்க: துருப்பிடித்த இரும்பு கேட்.. பள்ளிக்குள் நுழைந்த 13 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய சோகம்..! கண்ணீரில் பெற்றோர்.!