டயர் வெடித்து சோகம்.. 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்த லாரி.. ஓட்டுநர் பலி.!



  in Dindigul Lorry Accident Driver Died 

பாலத்தின் மேலே சென்ற லாரி, டயர் வெடித்து தடுப்பை உடைத்து கீழே விழுந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கொண்டலைக்கள்ளி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகர் (வயது 60). இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் லாரியில், கிளீனராக வேலை பார்த்து வருபவர் கிரண். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்தவர் ஆவார். 

மேம்பாலத்தில் சோகம்

இவர்கள் பெங்களூரில் இருந்து தூத்துக்குடிக்கு டீசல் ஏற்றிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். பின் டீசலை இறக்கிவிட்டு, மீண்டும் பெங்களூர் நோக்கி பயணித்து இருக்கின்றனர். இவர்களின் வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலை மேம்பாலத்தில் சென்றது.

இதையும் படிங்க: துருப்பிடித்த இரும்பு கேட்.. பள்ளிக்குள் நுழைந்த 13 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய சோகம்..! கண்ணீரில் பெற்றோர்.!

ஓட்டுநர்-கிளீனர் படுகாயம்

அப்போது, லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்துச் சிதறவே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

accident

மீட்புப்பணி

விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர், விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர், கிளீனரை மீட்டனர்.

ஓட்டுநர் பலி

இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநர் சந்திரசேகரன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: அதிவேகத்தால் துயரம்; குளத்திற்குள் பாய்ந்த கார்.. 8 பேர் பரிதாப பலி.!