குடும்பத் தகராறில் வெறிச்செயல்; மனைவி வெட்டிக்கொலை.!



  in Andhra Pradesh Anantpur Husband Killed Wife 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஸ்வரா ரெட்டி. இவரின் மனைவி புஷ்பவதி. தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடப்பது வழக்கம் என சொல்லப்படுகிறது.

இதனால் இருவரும் சில நேரங்களில் கடுமையான வாக்குவாதம் செய்வது, பின் சமாதானம் அடைவதும் என இருந்து வந்துள்ளனர். இதனிடையே, சம்பவத்தன்று இருவருக்கும் இடையே நீண்ட வாக்குவாதம் தொடர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் வெங்கடேஸ்வரா ரெட்டி கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

Murder

ஆத்திரத்தில் வெறிச்செயல்

ஒருகட்டத்தில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றவர், தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் இரத்தம் சொட்ட படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண்மணி, மருத்துவமனை செல்வதற்குள் உயிரிழந்தார். 

இதையும் படிங்க: நண்பனின் மனைவியிடம் அத்துமீறல்; உண்மை அறிந்து கொலைப்பழிக்கு ஆளான விபரீதம்.. நட்பு துரோகமானதால் சோகம்.!

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், புஷ்பவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்து தானும் தூக்கில் தொங்கிய கணவர்; கள்ளக்காதல் பழக்கத்தால் விபரீதம்.!