நண்பனின் மனைவியிடம் அத்துமீறல்; உண்மை அறிந்து கொலைப்பழிக்கு ஆளான விபரீதம்.. நட்பு துரோகமானதால் சோகம்.!



in Maharashtra Badlapur Man Rapes Friends Wife 

 

நண்பன் தானே என நம்பி வீட்டிற்குள் விட்டதற்கு, மிகப்பெரிய துரோகம் செய்த நபரை நண்பன் அடித்துக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பத்லாபூர் பகுதியில் வசித்து வருபவர் நாகேஷ். இவரின் நண்பர் சுராஜ். சுராஜுக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். இருவரும் நண்பர்கள் என்பதால், சுராஜின் வீட்டிற்கு நாகேஷ் அவ்வப்போது வந்து சென்றுள்ளார். 

இதையும் படிங்க: 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 14 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்.!

நண்பனின் மனைவி பலாத்காரம்

இந்நிலையில், சமீபத்தில் சுராஜின் மனைவியை பலாத்காரம் செய்த நாகேஷ், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்துபோன பெண்மணி சில நாட்கள் ஏதும் சொல்லாமல் இருந்துள்ளார். 

Badlapur

மதுபானம் அருந்த அழைத்து கொலை

பின் நாகேஷின் செயல்பாடுகள் மீண்டும் எல்லை மீறுவதாக தெரியவரவே, பெண்மணி கணவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுராஜ், தனது நண்பர் நாகேஷை மதுபானம் அருந்தலாம் என அழைத்துள்ளார். 

காவல்துறை விசாரணை

இதனை ஏற்று வந்த நாகேஷை, சுராஜ் சுத்தியலால் அடித்துக்கொண்டு சம்பவம் நடந்துள்ளது. கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நாகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சுராஜை கைது செய்த அதிகாரிகள், விசாரணைக்கு பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: 14 வயது சிறுமி பலாத்காரம்; வளர்ப்பு தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை.!