மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரம்.. லாரி மோதியதில் 10 பேர் பலி.! கோர விபத்து.!
டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் மாவட்டம், ஜிடி சாலை, கச்வா எல்லைப்பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் சுமார் 13 பயணிகளை ஏற்றுக்கொண்ட டிராக்டர் ஒன்று, ஜன்பத் பதாகி பகுதியில் இருந்து வாரணாசி நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்ததது.
இந்த வாகனம் கச்வா எல்லைப்பகுதியில் சென்றபோது, டிராக்டருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று, திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் மீது அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 13 பேரில், 10 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து; 8 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
UP: Abhinandan, Superintendent of Police in Mirzapur, says, "An accident occurred around 1 AM tonight at the Kachhwa border on GT Road, where a tractor carrying 13 people, traveling from Janpath Bhadohi towards Varanasi, was hit from behind by an uncontrolled truck. Upon… pic.twitter.com/5Z6KKWebn3
— IANS (@ians_india) October 4, 2024
எஞ்சிய 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அலறித்துடிக்க, தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நள்ளிரவு சுமார் 1 மணியளவில் விபத்து நடந்துள்ள காரணத்தால், லாரி ஓட்டுனரின் தூக்க கலக்கம் விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மலைப்பாதையில் நடந்த சோகம்; கார் மீது லாரி சாய்ந்து, 4 பேர் பலி.!