மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைநகரில் பயங்கரம்.. வீட்டு வாசலில் மாமா, மருமகன் சுட்டுக்கொலை.. நடுங்கவைக்கும் காட்சிகள்.!
தீபாவளி அன்று மர்ம நபர்களால் வீட்டின் வாசலில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரம் டெல்லியில் நடந்துள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில், தீபாவளியன்று ஷாஹ்தாரா பகுதியில் மாமா, மருமகன் முறைகொண்ட உறவினர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டை தடுக்க முயன்ற சிறுவனும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: "எனக்கு அவங்க தான் முக்கியம்.." தோழிகளுக்காக மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.!!
துப்பாக்கிச் சூடு
ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள பாரிஸ் பஜார், பிஹாரி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் ஆகாஷ் (வயது 40), இவரின் மருமகன் உறவுமுறை கொண்ட சிறுவன் ரிஷப் (வயது 16). இவர்கள் இருவரும் நேற்று தனது வீட்டின் வாசலில் இரவில் இருந்தபோது, இருவர் கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
இருவர் கொலை
இந்த சம்பவத்தில் ஆகாஷின் மகன் கிரிஷ் (வயது 10) என்பவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது.
दिल्ली के दिवाली के दिन डबल मर्डर।
— Sonu Kumar (@Sonu_indiatv) November 1, 2024
शाहदरा इलाके में चाचा भतीजे की गोली मारकर हत्या। @DelhiPolice @DCP_SHAHDARA#DelhiPolice #Crime #BREAKING
घटना का CCTV 👇 👇 👇 pic.twitter.com/BJxoU3Jwx0
இதையும் படிங்க: "அண்ணியை தொந்தரவு செஞ்சா அவ்வளவுதான்.." கண்ணை மறைத்த காமம்.!! நண்பன் படுகொலை.!!