மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அண்ணியை தொந்தரவு செஞ்சா அவ்வளவுதான்.." கண்ணை மறைத்த காமம்.!! நண்பன் படுகொலை.!!
கர்நாடக மாநிலத்தில் அண்ணியை தொந்தரவு செய்த நண்பனை தட்டிக் கேட்டதால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பனின் அண்ணிக்கு பாலியல் தொல்லை
கர்நாடக மாநிலம் கோலார் நகரில் உள்ள சுல்தான் திப்பசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் ரோகித்(22). அதே பகுதியைச் சேர்ந்தவர் அம்ஜத்(24). இவர்கள் இருவரும் நண்பர்கள். மேலும் ரோகித்தை சந்திப்பதற்கு அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார் அம்ஜத். இந்நிலையில் ரோகித்தின் அண்ணி மீது அம்ஜத்திற்கு ஆசை வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரது அண்ணியின் செல்போன் நம்பரை தெரிந்து கொண்ட அம்ஜத் அடிக்கடி போன் செய்து பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு செய்துள்ளார். மேலும் வீடியோ காலுக்கும் அழைத்ததாக தெரிகிறது.
ரோகித்திடம் புகார் கூறிய அண்ணி
இந்நிலையில் அம்ஜத்தின் நடவடிக்கைகள் குறித்து ரோகித்திடம் அவரது அண்ணி தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரோகித்தும், அம்ஜத்திடம் தனது அண்ணியை தேவையில்லாமல் தொந்தரவு செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார். எனினும் அம்ஜத், ரோகித்தின் அண்ணிக்கு போன் செய்து தொந்தரவு செய்வதை நிறுத்தவில்லை. இது தொடர்பாக அம்ஜத் மற்றும் ரோகித் இடையே பகை ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கோயில் அருகே பயங்கரம்.. கணவன் கண் முன்னே.. புதுப்பெண் கூட்டு பலாத்காரம்.!! 7 பேர் அதிரடி கைது.!!
திட்டம் போட்டு கொலை செய்யப்பட்ட ரோகித்
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரோகித் முன்னிலையில் அவரது அண்ணிக்கு வீடியோ கால் செய்திருக்கிறார் அம்ஜத். இதனைத் தொடர்ந்து தனது அண்ணியை தொந்தரவு செய்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ரோகித் எச்சரித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வேலைக்காக பெங்களூர் சென்ற ரோகித் நேற்று முன்தினம் ஊர் திரும்பி இருக்கிறார். இந்நிலையில் அவரை சந்திக்க வேண்டும் எனக் கூறிய அம்ஜத் ஜமால் நகர் என்ற பகுதிக்கு வரவழைத்து ரோகித் மார்பில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இதனையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட ரோகித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் தப்பியோடிய கொலை குற்றவாளியான அம்ஜத்தை கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.!! கையும் களவுமாக சிக்கிய டிடிஆர்.!!