#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"எனக்கு அவங்க தான் முக்கியம்.." தோழிகளுக்காக மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.!!
ஒடிசா மாநிலத்தில் தோழிகளுடன் பழகாதே என எச்சரித்த மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்தப் பெண்ணின் கணவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
தோழிகளை தவிர்க்க மனைவி எச்சரிக்கை
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் நகரில் வசித்து வருபவர் ப்ரத்யும்ன குமார். 24 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி இருந்தார். ப்ரத்யும்ன குமார் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பார்மசிஸ்டாக பணியாற்றி வருகிறார். மேலும் தன்னுடன் பணியாற்றும் 2 பெண்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது. இதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். மேலும் தோழிகளுடன் பழகுவதை தவிர்க்குமாறு கணவனை எச்சரித்திருக்கிறார் அவரது மனைவி.
தோழிகளுக்காக மனைவி கொலை
தன் மனைவி தோழிகளை தவிர்க்குமாறு கூறியதை ப்ரத்யும்ன குமார் விரும்பவில்லை. இதனால் தோழிகளுடன் சேர்ந்து தனது மனைவியை கொல்ல திட்டம் தீட்டியிருக்கிறார் ப்ரத்யும்ன குமார். இதனைத் தொடர்ந்து தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்த ப்ரத்யும்ன குமார் அவர்களின் உதவியுடன் மனைவிக்கு போதைப் பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்து கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.
இதையும் படிங்க: "படுக்க வரலைன்னா வீடியோவ ரிலீஸ் பண்ணிடுவேன்.." பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!! டாக்டரின் வெறி.!!
கைது செய்த காவல்துறை
இந்தக் கொலை தொடர்பாக இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அந்தப் பெண் போதைப் பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரது கணவனிடம் நடத்திய விசாரணையில் தன் தோழிகளுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ப்ரத்யும்ன குமார் மற்றும் அவரது 2 தோழிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதி பெயரைச் சொல்லி, புழுவைப்போல் நடத்தியதால் துயரம்; அரசு அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை.!