#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொண்டைக்குள் பலூன் சிக்கி சோகம்; 13 வயது சிறுவன் பரிதாப பலி.!
ஹிமாச்சல் பிரதேசம், கங்கரா மாவட்டத்தில் இருக்கும் ஜ்வாலி கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் விவேக் (13). அங்குள்ள சிட்புர்கர்க் பகுதியில் செயல்படும் பள்ளியில், இவர் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
கடந்த வாரம் வியாழக்கிழமையன்று சிறுவன் பள்ளிக்கு சென்ற சமயத்தில், தனது கைகளில் இருந்த பலூனை ஊதியதாக தெரியவருகிறது. அப்போது, மூச்சை உள்ளே இழுத்தபோது, சிறுவனின் தொண்டைக்குள் பலூன் எதிர்பாராத விதமாக சென்று சிக்கிக்கொண்டது.
சிகிச்சை பலனின்றி சோகம்
இதனை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க, உடனடியாக அங்கிருந்து உள்ளூர் மருத்துவமனைக்கு சிறுவன் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பதான்கோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து 15 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை; போலி மருத்துவரின் விபரீதத்தால் சோகம்.!
சிறுவன் மேல் சிகிச்சைக்கு சென்ற இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிறுவன், பள்ளிப்படிப்புக்கு பின்னர் குடும்பத்தை கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் இந்த சோகம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: 17 வயது சிறுவனின் உயிரைப்பறித்த ரசகுல்லா; படுத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கமுடையோர் உஷார்.!