யூடியூப் பார்த்து 15 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை; போலி மருத்துவரின் விபரீதத்தால் சோகம்.!



Bihar fake doctor Kills 15 aged Minor Boy

பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டம், மர்ஹவுரா காவல் எல்லைக்குட்பட்ட கிராமம் புவல்பூர். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சந்தன் ஷா. இவரின் 15 வயது மகன் கோலுவுக்கு சம்பவத்தன்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.  

இதனையடுத்து, சிறுவனின் தந்தை மோதிராஜ்புர் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவர் அஜித் குமார் கிரி என்பவரின் மருத்துவமனைக்கு மகனை அழைத்துசென்றுள்ளார். அங்கு சிறுவனை சோதனை செய்த மருத்துவர், சிறுவனுக்கு கற்கள் இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி இருக்கிறார். 

death

சிறுவன் பரிதாப பலி

இதனால் மகனின் உயிரை காக்க தந்தையும் சிறுவனை சிகிச்சைக்கு அனுமதிக்க, மருத்துவர் அஜித் யூடியூப் பார்த்து சிறுவனுக்கு குடல்வால் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனிடையே, சிறுவனின் உடல்நிலை மோசமானதால், அவர் பாட்னாவுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவனின் உயிர் பிரிந்தது. 

இதையும் படிங்க: 17 வயது சிறுவனின் உயிரைப்பறித்த ரசகுல்லா; படுத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கமுடையோர் உஷார்.!

இதனால் தவறான சிகிச்சை மேற்கொண்டதாக அஜித் மீது குற்றசாட்டு முன்வைத்து போராட்டம் நடத்த, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையிலேயே அஜித் குமார் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. இவர் யூடியூப் பார்த்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முற்பட்டபோது விபரீதம் நடந்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பாம்பை பற்களால் கடித்து மென்ற சிறுவன்; விளையாட்டு பொருள் என நினைத்து பகீர் காரியம்.!