மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுவனின் உயிரைப்பறித்த ரசகுல்லா; படுத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கமுடையோர் உஷார்.!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிங்பூம், மாலுதிஹ், பத்மஹிலியா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அமித். இவர் எப்போதும் செல்போனும், கையுமாக திரிந்து வந்துள்ளார். மேலும், உணவு, நொறுக்குத்தீனிகள் சாப்பிடும்போது அதனை பயன்படுத்தியவாறு சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இதனிடையே, சம்பவத்தன்று படுக்கையில் இருந்தவாறு ரசகுல்லா சாப்பிட முயன்ற நிலையில், அது தொண்டையில் சென்று சிக்கிக்கொண்டது. இதனால் பதறிப்போன அவர் மூச்சிரைத்து இருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
தொண்டையில் ரசகுல்லா சிக்கி சோகம்
ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பதை உறுதி செய்துள்ளனர். இதனால் அவரின் குடும்பத்தினர் கதறியழுதது, அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: அனுதினமும் கணவனுக்கு நரக வாழ்க்கை பரிசு; சோறு கூட போடாததால் விபரீத முடிவு.!
3 மாதத்திற்கு பின்னர் ஒடிசாவுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மாமாவை அழைக்கச்சென்ற அமித், வீட்டிற்கு மாமாவுடன் ரசகுல்லா வாங்கி வந்துள்ளார். அப்போதுதான் இந்த துயரம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: திருமணம் முடிந்த சிலமணிநேரத்தில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்; வாக்குவாதத்தில் வெறிச்செயல்.!