மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுத்துணி கேட்டது குத்தமா?.. மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கணவர்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், நெலமங்களா, தாஸ்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சிவானந்தம். இவரின் மனைவி காவியா (வயது 28). தம்பதிகளுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சிவானந்தம், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்றுள்ளார். இதனால் அவரின் மனைவி சிரமப்பட்டு 2 குழந்தைகளையும் கவனித்து வந்துள்ளார்.
புதிய துணி கேட்டதில் வாக்குவாதம்
இந்நிலையில், வரமஹாலட்சுமி பண்டிகைக்காக மனைவி காவியா, கணவரிடம் தனக்கு புதிய புடவை எடுத்து தருமாறு கூறி இருக்கிறார். இதற்கு சிவானந்தம் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து தம்பதிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: 24 வயது இளம்பெண் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை; பெண்கள் விடுதிக்குள் புகுந்து துணிகரம்.!
மனைவி எரித்துக்கொலை
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சிவானந்தம் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்று தப்பி சென்றுள்ளார். காவியாவின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்-பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து நடந்த விசாரணையில் உண்மை அம்பலமாகவே, சிவானந்தத்தை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காதலியை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ காதலன்; நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவத்தின் காரணம்.!