மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
24 வயது இளம்பெண் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை; பெண்கள் விடுதிக்குள் புகுந்து துணிகரம்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், கோரமங்களா பகுதியை சேர்ந்தவர் கீர்த்தி குமாரி (வயது 24). இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கோரமங்களா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்து தங்கி இருக்கிறார்.
சரமாரியாக குத்திக்கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் பெண்கள் விடுதிக்குள் திருட்டுத்தனமாக கத்தியுடன் நுழைந்த இளைஞர், கீர்த்தியை சரமாரியாக கத்தியால் குத்தினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த பிறபெண்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: காதலியை பலாத்காரம் செய்து கொன்ற சைக்கோ காதலன்; நடுநடுங்க வைக்கும் பகீர் சம்பவத்தின் காரணம்.!
காவல்துறையினர் விசாரணை
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த கோரமங்களா காவல்துறையினர், கீர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மேற்படி சம்பவம் குறித்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இளைஞர் ஒருவர் கீர்த்தியை தாக்கும் காட்சிகள், அங்குள்ள கேமிராவில் பதிவாகி இருக்கிறது.
வீடியோ நன்றிநியூஸ் 18 தொலைக்காட்சி
#JUSTIN பெங்களூருவில் விடுதிக்குள் புகுந்து இளம்பெண்ணை கொடூரமாக குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் #Bangalore #CCTV #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/tu2yMZHkbT
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 26, 2024
இதையும் படிங்க: டீ கொடுக்காதது ஒரு குற்றமா? மருமகளின் கழுத்தை நெரித்துக்கொன்ற மாமியார்; பதைபதைக்க வைக்கும் கொடூரம்.!