#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
அணையில் தவறி விழுந்து 3 சிறுமிகளுக்கு நேர்ந்த சோகம்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!
கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டம், பீச்சி அணைத்தேக்கத்திற்கு சம்பவத்தன்று தோழிகள் சென்று இருந்தனர். அப்போது, நீர்த்திக்கத்திற்குள் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் மீட்புப்படை அதிகாரிகள் மீட்டனர்.
3 பேர் பரிதாப பலி
முதற்கட்ட மீட்பு நடவடிக்கையில் 2 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்த பினோஜ் - ஜூலை தம்பதியின் மகள் எரின் (வயது 16), நேற்று மாலை நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் பயங்கரம்.. துணிக்கடை உரிமையாளர் சுட்டுக்கொலை.!
ஒரு சிறுமி உயிர் ஊசல்
முன்னதாக ஷஜி - செரீனா தம்பதியின் மகள் ஆன் கிரேஸ் (வயது 16), ஷாஜன் - சிஜி மகள் அலினா (வயது 16) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிமா என்ற 12 வயது சிறுமி, படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: காலாவதியான குளுக்கோஸ் செலுத்தப்பட்டதால் சோகம்; கர்ப்பிணி பெண் பலி.!