#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குழந்தையின் தங்க சங்கிலியை நொடியில் பறித்துச்சென்ற கேடி லேடிஸ்; பகீர் வீடியோ வைரல்.. பெற்றோர்களே கவனம்.!
விபரமானவர்களையே நொடியில் ஏமாற்றி நகை திருடும் கும்பல் வெளியே சுற்றிவரும் நிலையில், குழந்தைகளுக்கு தங்கம் அணிவித்துவிடும் பெற்றோர் சற்று கவனமாக இருக்க வேண்டியதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில், சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் தனது குழந்தையுடன் மருந்தகத்திற்கு வருகை தந்திருந்தார். அங்கு குழந்தைக்கு மருந்து வாங்கிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: மது போதையால் கொடூரம்... 17 வயது சிறுமி கற்பழிப்பு.!! 27 வயது நபர் கைது.!!
அச்சமயம், அங்கு வந்த இரண்டு இளம்பெண்கள், குழந்தைக்கு மிக அருகில் நெருக்கமாக இருந்தனர். சற்றும் எதிர்பாராத போது, குழந்தையின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
காவல்துறையினர் விசாரணை
இதனை அறியாத தாய் மருந்து வாங்குவதில் மும்மரமாக இருந்தார். பின் மகனின் நகைகள் மாயமானதை அறிந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் நடந்த விசாரணையில், அதிகாரிகள் மருந்தகத்தில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வுசெய்தபோது உண்மை அம்பலமானது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து, திருட்டுசெயலில் ஈடுபட்ட பெண்களுக்கு வலைவீசி இருக்கின்றனர்.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பொதுஇடங்களுக்கு செல்வோர், சற்று கவனத்துடன் செயல்பட்டுக்கொள்வது நல்லது.
பெண்கள் திட்டமிட்டு நகையை திருடும் காட்சிகள்
கேமிராவில் பதிவான திருட்டு காட்சிகள்
இதையும் படிங்க: மரணத்தின் வாயில் வரை சென்று வீடு திரும்பிய தம்பதி; கிணற்றில் பாய்ந்த கார்.. பதறவைக்கும் சம்பவம்.!