கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்த பள்ளி பேருந்து; 10 வயது மாணவி பரிதாப பலி..!



  in Kerala Kannur School Van Accident 10 Year Old Girl Dies 

குருமாத்தூர் பகுதியில் நடந்த விபத்தில், 10 வயதுடைய பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர், வலக்கலை, குருமாத்தூர் பகுதியில், சம்பவத்தன்று 20 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர்களை ஏற்றுக்கொண்ட சின்மயா என்ற தனியார் பள்ளி பேருந்து பயணம் செய்தது. 

இந்த பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் மேல்புறத்தில் இருந்து கீழ்புறமாக பாய்ந்து விபத்தில் சிக்கியது.

இதையும் படிங்க: திடீரென பிரேக் அடித்த லாரி.. தனியார் பேருந்தின் வேகத்தால் 6 பேர் பரிதாப பலி..! 

நொடியில் நடந்த விபத்து

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் 20 மாணவ - மாணவியர்கள் காயமடைந்த நிலையில், 5ம் வகுப்பு பயின்று வரும் 10 வயதுடைய மாணவி, பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

வலக்கலை பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 10 வயதுடைய மாணவி நேத்யா என்பவர் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தின் காட்சிகள்

இதையும் படிங்க: தேனிலவு முடித்த தம்பதிக்கு வழியில் காத்திருந்த எமன்; உறக்கத்தால் துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்.!