கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
தேனிலவு முடித்த தம்பதிக்கு வழியில் காத்திருந்த எமன்; உறக்கத்தால் துள்ளத்துடிக்க பறிபோன 4 உயிர்.!

தேனிலவுக்குச் சென்ற தம்பதி வீட்டிற்கு திரும்பும் வழியில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டம், கொன்னி மல்லச்சேரி பகுதியில் வசித்து வருபவர் ஈப்பன் மத்தாய் (வயது 63). இவரின் மகன் நிகில் (வயது 29). இவர் கனடாவில் பணியாற்றி வருகிறார். கடந்த நவ.30 அன்று நிகில் - மல்லச்சேரி பகுதியில் வசித்து வந்த பிஜு ஜார்ஜ் (வயது 58) என்பவரின் மகள் அணுவுக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.
தேனிலவு முடிந்து வந்த தம்பதி
திருமணத்தைத்தொடர்ந்து, நிகில் - அனு தம்பதி மலேஷியாவில் தேனிலவுக்கு சென்றுள்ளனர். பின் தேனிலவை முடித்துவிட்டு இருவரும் இன்று அதிகாலை நேரத்தில் விமானத்தில் கேரளா திரும்பி இருக்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து இவர்கள் நால்வரும் காரில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: விமான நிலைய பார்சலில் அதிர்ச்சி; குழந்தையின் சடலம் மீட்பு.. அதிர்ந்துபோன அதிகாரிகள்.. பதறவைக்கும் காணொளி.!
4 பேர் பலி
காரை பிஜி இயக்க, அதிகாலை 4 மணியளவில் பத்தினம்திட்டா மாவட்டம், கூடல் பகுதியில் கார் வந்துள்ளது. புனலூர் - மூவாற்றுப்புழா தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது, எதிர்பாராத விதமாக தெலுங்கானா மாநில ஐயப்ப பக்தர்களின் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் உருகுலைந்துப்போனது.
பதறவைக்கும் சோகம்
விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மத்தாயி, பிஜி சார்ஜ், நிகில் ஆகியோரின் சடலத்தை மீட்டனர். இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அனு மட்டும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். தம்பதிகளின் வீடு உள்ள இடத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் விபத்து நடந்து புதுமணத்தம்பதி உட்பட 4 பேர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த விஷயம் தம்பதியின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உரக்க கலக்கத்தில் ஜார்ஜ் இருந்ததால் விபத்து நேர்ந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: மாயமான இளம்பெண்ணின் உடல் ஆற்றில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. பெற்றோர் கண்ணீர்.!