மாயமான இளம்பெண்ணின் உடல் ஆற்றில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.. பெற்றோர் கண்ணீர்.!



  in Kerala Kozhikode Missing Woman Found Died in River 

இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட இளம்பெண்ணின் உடல் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வருபவர் சினேகா அஞ்சலி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. 

பெண் மாயம்

இதனால் பதறிப்போன குடும்பத்தினர், பல இடங்களில் அவரை தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காத காரணத்தால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; 11 பேரின் உயிரை பறித்த சோகம்..!

சடலமாக மீட்பு

இதனிடையே, இரண்டு நாட்கள் கழித்து முத்தாண்டி ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் குடை மற்றும் காலணி போன்றவை இருப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் ஆற்றில் பெண்ணின் உடலை தேடியுள்ளனர். 

ஆற்றில் சடலம்

செருப்பு மீட்கப்பட்ட இடத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அது சினேகா அஞ்சலியின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பெண்ணின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 21 வயது இளம்பெண்ணை கொன்ற புலி.. நொடிப்பொழுதில் நடந்த சோகம்.. உறவினர்கள் கண்ணீர்.!