21 வயது இளம்பெண்ணை கொன்ற புலி.. நொடிப்பொழுதில் நடந்த சோகம்.. உறவினர்கள் கண்ணீர்.! 



in Telangana a Woman Killed by Tiger 

வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த பலி, பெண்ணை கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அஷீதாபாத் மாவட்டம், கண்ணாரம் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி (வயது 21). இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள திறந்த வெளி பகுதியில் இருந்துள்ளார். 

புலி தாக்கியது

அப்போது வனப்பகுதியில் இருந்து திடீரென வந்த புலி ஒன்று, அவரை தாக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நிலைகுலைந்து விழுந்த பெண் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவர், புலியால் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அதனை சத்தமிட்டு விரட்டினர். 

இதையும் படிங்க: "விளையாட்டு வினையானது" - 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் மரணம்; நெஞ்சை ரணமாக்கும் சோகம்.! 

பெண் பலி

பின் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மீட்டனர் இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பெண்ணின் உறவினர்கள் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமான 5 நாளில், புதுமணப்பெண்ணின் உயிரை காவு வாங்கிய எமன்; வாட்டர் ஹீட்டர் வெடித்து பலி.!