அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
13 வயதில் தொடங்கி 65 காமுகர்களால் சிறுமி பலாத்காரம்.. இந்தியாவே பதறும் சோகம்.! கேரளாவில் திடுக் சம்பவம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், காவல்துறையினர் சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கிறது. அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக 18 வயது சிறுமி அனுபவித்து வந்த கொடூரம் பதறவைக்கும் வகையில் அம்பலமானது. இதுதொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தில், பல பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.
ஆபாச வீடியோ காண்பித்து அரங்கேறிய கொடுமை
13 வயது சிறுமியின் அண்டை வீட்டில் வசித்து வந்த சுபின் என்பவர், ஆபாச வீடியோ காண்பித்து அத்துமீறி இருக்கிறான். பின் சிறுமியை பலவந்தப்படுத்தி அரங்கேற்றிய கொடுமையை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி, தனியே மலைப்பாங்கான இடத்திற்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளான். இந்த செயல் பல மாதங்களாக தொடர்ந்துள்ளது. விடியோவை காண்பித்து மிரட்டி கொடூரம் நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: "பெண்ணின் உடலமைப்பை கூறும் கருத்து பாலியல் கருத்தே": கேரள உயர்நீதிமன்றம்.!
65 பேரின் லிஸ்ட் சேகரிக்கப்படுகிறது
சிறுமி தொடர்பான நிர்வாண விடியோவை நண்பர்களுக்கும் அனுப்பி, அவர்களும் அத்துமீற அனுமதித்த கொடூரனின் செயலும் தெரியவந்துள்ளது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுமியை பயிற்சியாளர் தொடங்கி, சக போட்டியாளர் வரை என 65 பேர் இதுநாள் வரை சீரழித்து இருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தலித் சிறுமி இக்கொடுமையை அனுபவித்து இருக்கிறார்.
20 பேர் கைது
மாணவி தனது தந்தையின் செல்போனில் குற்றவாளிகள் 40 பேர் பெயர், ஸ்மார்ட்போன் நம்பரை சேகரித்து வைத்திருக்கவே, காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது தந்தையின் ஸ்மார்ட்போனை பயன்படுத்திவர, அதற்கும் தொடர்புகொண்டு சிறுமியை பலவந்தப்படுத்தி இருக்கின்றனர். பள்ளி தோழர்கள், பக்கத்து வீட்டு இளைஞர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என கொடுமை அரங்கேறி இருக்கிறது. 20 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருபிடி.. கிறுகிறுன்னு சுத்தி தூக்கி எறிஞ்சிருச்சு.. கூட்டத்தின் நடுவே யானை அதிர்ச்சி செயல்.!