"பெண்ணின் உடலமைப்பை கூறும் கருத்து பாலியல் கருத்தே": கேரள உயர்நீதிமன்றம்.! 



Kerala High Court on Body Shaming 

 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மின்வாரிய பணியாளர், தன்னுடன் பயின்று வந்த சக பெண் ஊழியரை எப்போதும் ஆபாசமாக கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. அவரின் செயல்பாடுளை பெண்மணி முடிந்தளவு பொருத்துச் சென்றுள்ளார். 

நாட்கள் செல்லச்செல்ல மின்வாரிய பணியாளர் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்ப தொடங்கி இருக்கிறார். இதனால் விரக்தியடைந்த பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற அதிகாரிகள், மின்வாரிய பணியாளரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: ஒருபிடி.. கிறுகிறுன்னு சுத்தி தூக்கி எறிஞ்சிருச்சு.. கூட்டத்தின் நடுவே யானை அதிர்ச்சி செயல்.!

High court

வழக்கை ரத்து செய்ய மறுப்பு

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தான் பெண்ணிடம் சாதாரணமாக பேசியதாகவும், தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், இது பாலியல் தொல்லை இல்லை என்றும் வாதாடி இருக்கிறார். இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர். 

மேலும், பெண்ணின் உடல் அமைப்பு தொடர்பாக கருத்து தெரிவிப்பது, பாலியல் தன்மையுடன் இருக்கும் கருத்துதான். இது பாலியல் துன்புறுத்தல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வரும். ஆகையால் குற்றம் சாட்டப்பட்டவரின் மனு கோரிக்கை நிராகரிப்பு செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: உயிரை காப்பாற்ற பயணம்.. வழியில் வந்த எமன்.. இப்படி எல்லாமா மரணம் வரணும்.?!