திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
பெண்ணை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்; யூடியூபர் அதிரடி கைது.!

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம், வழிகடவு பகுதியில் வசித்து வருபவர் ஜுனைத் (வயது 32). இவர் யு-டியூபராக இருக்கிறார். வீடியோ வெளியிட்டு பிரபலமான நபருக்கு, இளம்பெண்ணின் முகம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்த நிலையில், ஜுனைத் அவர்கள் காதலிப்பதாக கூறியுள்ளார்.
பின் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து, மலப்புரம் உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இளம்பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துசென்றவர், ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணமான ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய சட்டக்கல்லூரி மாணவி.! கதறும் கணவன்.!
காவல் நிலையத்தில் புகார்
இந்த விஷயம் தொடரவே, ஒருகட்டத்தில் விரக்தியடைந்த பெண்மணி மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்ற காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வழக்கு விஷயத்தை அறிந்த ஜுனைத் பெங்களூர் சென்று வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முற்படவே, விமான நிலைய அதிகாரிகள், பெங்களூர் காவல்துறையினர் உதவியுடன் ஜுனைத் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: எச்சில் உமிழ்ந்த நீரை கொடுத்து ராகிங் கொடுமை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்.!