நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
எச்சில் உமிழ்ந்த நீரை கொடுத்து ராகிங் கொடுமை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்.!

கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதல் ஆண்டு மாணவர் பயின்று வருகிறார். இவர் தன்னை சீனியை மாணவர்கள் ராகிங் செய்ததாக ராகிங் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.
இதன்பேரில் நடந்த விசாரணையில், கடந்த பிப்.11 அன்று சீனியர் மாணவர்கள் - ஜூனியர் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் மூன்றாம் வருடம் பயின்று வரும் மாணவர்கள் 7 பேர், 2 ஜூனியர் மாணவர்களை தாக்கி இருக்கின்றனர்.
ராகிங் கொடுமை
இந்த விஷயம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, சீனியர் மாணவர்கள் 7 பேர் சேர்ந்து, மாணவர் ஒருவரை கட்டி வைத்து தாக்கியுள்ளனர். மேலும், சட்டையை கிழித்து தாக்கி, எச்சில் துப்பிய நீரை குடிக்கச் சொல்லி துன்புறுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இளைஞர்களின் அதிவேகத்தில் தம்பதி ஒருசேர விபத்தில் மரணம்.!
விசாரணையில் இந்த விவகாரம் அம்பலமானதைத்தொடர்ந்து, 7 மாணவர்களும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: தொண்டையில் பாட்டில் மூடி சிக்கி 8 மாத கைக்குழந்தை பலி.. பெற்றோரே கவனம்.!