திருமணமான ஒரே மாதத்தில் தூக்கில் தொங்கிய சட்டக்கல்லூரி மாணவி.! கதறும் கணவன்.!



Kerala Kozhikode women hanging by suicide 

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் அர்த்ரா (வயது 24) என்ற பெண் சட்ட கல்லூரியில் கடைசி வருடம் படித்து வந்துள்ளார். இந்த பெண்ணிற்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி ஷான் என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு அர்த்ரா குளிப்பதற்காக சென்றுள்ளார். 

நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை. எனவே, சந்தேகம் அடைந்த கணவர் ஷான் கதவைத் தட்டி பார்த்துள்ளார். ஆனால் கதவை அர்த்ரா திறக்கவில்லை. தட்டி தட்டி பார்த்த ஷான் ஒரு கட்டத்தில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

KERALA

அப்போது அங்கே தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார் அர்த்ரா. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். ஆனால் அவரின் உயிர் காப்பாற்றப்படவில்லை. 

இதையும் படிங்க: எச்சில் உமிழ்ந்த நீரை கொடுத்து ராகிங் கொடுமை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்.!

இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். எதற்காக புதுமண பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது இன்னமும் தெரியவில்லை.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; இளைஞர்களின் அதிவேகத்தில் தம்பதி ஒருசேர விபத்தில் மரணம்.!