உணவு கொடுக்காத மனைவி வெட்டிக்கொலை; கணவர் பகீர் சம்பவம்.!



  in Madhya Pradesh Husband Killed Wife with Axe 

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாண்டுர்னா, சிவாரா கிராமத்தில் வசித்து வருபவர் ராஜு பாட்டில் (வயது 46). இவரது மனைவி பத்மா (வயது 42). தம்பதிகள் இருவருக்கும் 17 வயதுடைய மகள் இருக்கிறார். 

கடந்த சில மாதங்களாக ராஜு, தனது மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்த விஷயத்தால் கணவன் - மனைவியிடையே அவ்வப்போது வாக்குவாதமும் நடந்து வந்துள்ளது. 

மனைவி வெட்டிக்கொலை

இந்நிலையில், ஆத்திரத்தில் இருந்த பத்மா, தனது கணவருக்கு கடந்த சில நாட்களாகவே உணவு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் உச்சகட்ட ஆத்திரத்துக்கு சென்ற ராஜு, கடந்த ஜனவரி 4ஆம் தேதி தனது மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்தார். 

இதையும் படிங்க: டீ போட்டு கொடுக்காததால் ஆத்திரம்; மனைவியை கோடரியால் தீர்த்துக்கட்டிய கணவர்.!

Murder

காவல்துறை விசாரணை

பின் அவர் தலைமறைவான நிலையில், 17 வயது மகள் தாயின் அலறலைக்கேட்டு எழுந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த வந்த காவல்துறையினர், பத்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தலைமறைவாக இருந்த ராஜு காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.

இதையும் படிங்க: செய்தியாளர் கொடூரமாக அடித்துக்கொலை; செப்டிக் டேங்கில் மீட்கப்பட்ட சடலம்.!