Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
டீ போட்டு கொடுக்காததால் ஆத்திரம்; மனைவியை கோடரியால் தீர்த்துக்கட்டிய கணவர்.!
கணவன் - மனைவி சண்டையில் ஆத்திரத்தில் நடந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சங்கிலி மாவட்டத்தில் வசித்தவர் கேவல். இவரது மனைவி ஐஸ்வரி. தம்பதிகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
சிறு சிறு விஷயங்களுக்கு கூட கருத்து முரட காரணமாக இருவரும் அதிக சண்டையிட்டு வந்ததாக தெரிய வருகிறது. இதனிடையே, கடந்த ஜனவரி 3ஆம் தேதி ஐஸ்வரி வீட்டில் டீ போட்டுக் கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: செய்தியாளர் கொடூரமாக அடித்துக்கொலை; செப்டிக் டேங்கில் மீட்கப்பட்ட சடலம்.!
கோடரியால் வெட்டிக்கொலை
அப்போது, தம்பதிகளுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் உண்டாகிய நிலையில், அவர் டீ கொடுக்காததால் ஆத்திரமடைந்த கேவல் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து தலைமறைவானார்.
அதனைத்தொடர்ந்து, தனது மனைவியை கொலை செய்து விட்டதாக அவர் காவல் நிலையத்திலும் சரணடைந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், கேவலின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் நடந்து சென்ற இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்.. பொதுமக்கள் உதவி.!