சிறுமியின் மீது விழுந்த இளைஞர்.. தலையில் காயமடைந்து, மூக்கு உடைந்து பரிதாப மரணம்.!



  in Maharashtra Mumbai 2 Year Old Girl Died 

இளைஞர்களின் விளையாட்டு வினையாகி 2 வயது சிறுமி உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அம்ரிதளவாடி, ஜூஹூ பகுதியில் வசித்து வருபவர் வினய் அக்ராஹாரி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 2 வயதுடைய விதி அக்ராஹாரி என மகள் இருக்கிறார். வினய் சொந்தமாக மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர்கள் வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஹர்ஷத் கௌரவ் (வயது 20), கௌரவின் நண்பர் ஷாநவாஸ் அன்சாரி. 

சம்பவத்தன்று நண்பர்களான ஹர்சத், அன்சாரி ஆகியோர் தங்களுக்குள்ளாக தள்ளிவிட்டு விளையாடி இருக்கின்றனர். அப்போது, சிறுமி விதி கடைக்கு அருகே நின்று தனியே விளையாடிக்கொண்டு இருந்தார். அவரை தாய் கவனித்து வந்துள்ளார். இதனிடையே, நண்பர்கள் இருவரும் தள்ளிக்கொண்டு கடைக்கு அருகே வந்துள்ளனர். 

இதையும் படிங்க: அலட்சியத்தால் சோகம்.. மின்மோட்டார் வயரை பிடித்த ஒன்றரைவயது குழந்தை மின்சாரம் தாக்கி பலி.!

death

மூக்கு உடைந்து சோகம்

அப்போது, சிறுமி விளையாடுவதால் சற்று தள்ளிச் சென்று விளையாடுமாறு இருவருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் அன்சாரி தள்ளிவிட்டதில் கௌரவுக்கு நிலை தடுமாறி சிறுமியின் மீது விழுந்துள்ளார். இதனால் சிறுமி தலையில் காயம் அடைந்துள்ளார். மூக்கு உடைந்து இருக்கிறது. 

இந்த சம்பவம் ஜனவரி 02, 2025 அன்று நடைபெற்ற நிலையில், மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கௌரவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாட்டு; 3 சிறார்கள் இரயிலில் அடிபட்டு பலி.!