சந்திசிரிக்கும் தலைநகரின் சட்டம்-ஒழுங்கு; துப்பாக்கிகளை ஏந்தி சரமாரி துப்பாக்கிசூடு.!



In New Delhi Seemapuri Pub Gun Fire by Gang 

புதுடெல்லி மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே குற்றச்செயல்களில் எண்ணிக்கையானது கடுமையாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அங்கு குற்றச்செயல்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. 

பட்டப்பகலில் நகைக்கடைகளில் துப்பாக்கி முன்னிலையில் கொள்ளையடிப்பது, கொடூரமாக கொலை செய்வது என சர்ச்சைகள் தொடருகின்றன. இதனிடையே, டெல்லியில் உள்ள பப்பில், சிலர் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து 15 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை; போலி மருத்துவரின் விபரீதத்தால் சோகம்.!

புதுடெல்லியில் உள்ள சீமாபுரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பப் ஒன்றில், வாடிக்கையாளராக வந்தவர்களுக்கும் - பப் பாதுகாப்பு ஜிம்பாய்ஸ்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நபர்கள், ஜிம் பாய்ஸ்-க்கு எதிராக தங்களின் ஆணவத்தை தெரிவிக்க துப்பாக்கிசூடு நடத்தினர். வானத்தை நோக்கி பலமுறை துப்பாக்கிசூடு நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரசவத்திற்கு ரூ.4 ஆயிரம் கேட்ட ஊழியர்கள்; குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை செய்து பணம் கொடுத்த தந்தை.!