மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரசவத்திற்கு ரூ.4 ஆயிரம் கேட்ட ஊழியர்கள்; குழந்தையை ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை செய்து பணம் கொடுத்த தந்தை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹரிஷ் படேல். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, ஒரு குழந்தை இருக்கின்றனர். இதனிடையே, ஹரிஷின் மனைவி இரண்டாவது முறையாக கருத்தரித்த நிலையில், அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, நிறைந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படவே, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு பெண்ணுக்கு பிரசவம் முடிந்து குழந்தையும் பிறந்துள்ளது. இதனிடையே, ஹரிஷிடம் மருத்துவமனை ஊழியர் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரியவருகிறது.
பணம் கேட்டு மிரட்டல்
தன்னிடம் பணம் இல்லை என்று அவர் தெரிவித்தபோது, பணத்தை கொடுத்துவிட்டு மனைவி மற்றும் குழந்தையை மீட்டுச்செல்லுமாறு மருத்துவமனை ஊழியர்கள் கூறி இருக்கின்றனர். இதனால் மனமுடைந்துபோன ஹரிஷ் செய்வதறியாது தவித்த நிலையில், அவர்கள் ஹரிஷிடம் பேரம் பேசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இதுக்கெல்லாமா தற்கொலை?.. தேங்காய் தண்ணீர் கொடுக்காததால், 15 வயது சிறுவன் தற்கொலை..!
குழந்தை விற்பனை
அதாவது ரூ.20 ஆயிரத்திற்கு பிறந்த குழந்தையை விற்பனை செய்தால், உனது மனைவியை அனுப்பி வைக்கிறோம் என்று கூறி இருக்கின்றனர். இதனால் வேறு வழியின்று ஹரிஷும் பிறந்த குழந்தையை விற்பனை செய்துள்ளார். அவரின் உறவினர்கள் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் வந்து பார்த்தபோது விபரீதம் புரிந்தது.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் குழந்தையை வாங்கி விற்பனை செய்த போலா யாதவ், தரகர் அம்ரேஷ் யாதவ், தாரா குஷ்வாடா, 2 மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: "அம்மா வீட்டுக்கு போகணும்" - அடம்பிடித்த மனைவியின் மூக்கை அறுத்த கணவன்; அதிர்ச்சி சம்பவம்.!