ஆன்லைன் டிரேடிங்கில் பணம் இழப்பு; 29 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!



in Pondicherry Ariyankuppam Youth Died 

 

டிரேடிங்கில் பணம் இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரியாங்குப்பத்தில் நடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம், மனவெளி தேர்மூட்டி வீதியில் வசித்து வருபவர் முருகன். இவரின் மகன் சத்திய பாபு (வயது 29). இவர் எந்நேரமும் ஸ்மார்ட்போனில் நண்பர்களுடன் கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக வைத்து இருந்துள்ளார். 

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் நேரலையில் பெண் தற்கொலை; பதறியடித்து வீட்டுக்கு செல்வதற்குள் பிரிந்த உயிர்.!

இதனிடையே, சமீபத்தில் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் ரூ.1.5 இலட்சம் பணம் வரை இழந்துள்ளார். இதனால் சில நாட்களாகவே அவர் விரக்தியில் இருந்து வந்துள்ளார். 

Pondicherry

தூக்கிட்டு தற்கொலை

இந்நிலையில், நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் சத்யபாபு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தூக்கில் சடலமாக தொங்கிய சத்யபாபுவை கண்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. 

இந்த விஷயம் குறித்து அரியாங்குப்பம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் ஆன்லைன் டிரேடிங்கில் ரூ.1.5 இலட்சம் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: மனைவியின் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை; டெல்லியில் அடுத்த சோகம்.!