காரில் வந்து முட்டையை களவாடிச் சென்ற குடும்பம்? வீடியோ வைரலானதும் ட்விஸ்ட்.!



in Punjab a Family Fleeing without Paying for Eggs 

 

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டம், ஹல்கா கிதர்பாஹா, பாலியானா கிராமத்தில் சாலையோர மளிகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிரது. இங்கு நேற்று இரவு 07:00 மணியளவில் குடும்பத்தினர் காரில் வருகை தந்தனர். இவர்கள் மொத்தமாக நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கிய நிலையில், ரூ.2100 மதிப்புக்கு முட்டை வாங்கி, பின் காரில் புறப்பட்டுச் சென்றனர். முட்டை வாங்க பணம் கொடுக்காமல், முட்டைகளை காருக்குள் ஏற்றியபின் பறந்து சென்றனர். இந்த விஷயம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

இதையும் படிங்க: இந்தியாவில் உறுதியானது எச்எம்பிவி வைரஸ்; மீண்டும் ஊரடங்கு? நெட்டிசன்கள் கேள்வி..!

வீடியோ வைரலானதால் விளக்கம்

இதனிடையே, மறுநாள் காலையில் கடைக்கு திரும்ப சென்ற நபர்கள், நாங்கள் முட்டையை திருடவில்லை. நேற்று இரவு 6 அட்டை முட்டைகளை வாங்கியபின், அதற்கு ஜி-பேவில் பணம் செலுத்த முற்பட்டோம். ஆனால், அது நிறைவேறவில்லை. பணம் சென்றுவிடும் என நாங்களும் வீட்டிற்கு வேகமாக சென்றுவிட்டோம். அங்கு சென்று பார்த்தபோது பணம் செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது கடை பூட்டி இருந்தது. இதற்கிடையே வீடியோ வைரலாகியது என தெரிவித்தனர். 

இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்; காண்டம் அமோக விற்பனை.!