இந்தியாவில் உறுதியானது எச்எம்பிவி வைரஸ்; மீண்டும் ஊரடங்கு? நெட்டிசன்கள் கேள்வி..!



in India HMPV Virus Confirmed In Bangalore Now No Lockdown

 

கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது. ஊரடங்கு போன்ற பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட மக்கள், இன்றளவும் அதன் தாக்கத்தில் இருந்து மீள இயலாமல் போராடி வருகின்றனர். 

தடுப்பு நடவடிக்கை தீவிரம்

இதனிடையே, சமீபத்தில் சீனாவில் எச்எம்பிவி எனப்படும் வைரஸ் ஒன்று பரவுவதாக தகவல் வெளியான நிலையில், அதன் தடுப்பு நடவடிக்கை அங்கு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், பிற உலக நாடுகளும் முக்கிய விமான நிலையங்களில் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: #JustIN: இந்தியாவே உஷார்.. 8 மாத குழந்தைக்கு உறுதி செய்யப்பட்டது HMPV வைரஸ்..!

எம்எம்பிவி வைரஸ்

இந்நிலையில், இந்தியாவில் 2 எச்.எம்.பி.வி வைரஸ் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெங்களூரில் உள்ள பாப்பிஸ்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்த 3 மாத பெண் கைக்குழந்தை, 8 மாத ஆண் கைக்குழந்தைக்கு எச்எம்பிவி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது..

HMPV Virus

அறிகுறிகள்

இருமல், காய்ச்சல், நாசி நெரிசல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறி இருந்தால் மருத்துவமனையில் சோதனை செய்து உரிய சிகிச்சை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸை போல எச்.எம்.பி.வி வைரஸ் அதிகம் பரவினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுமா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஊரடங்கு அமலாகுமா?

ஏனெனில், கடந்த ஊரடங்கு நடவடிக்கையின்போது மக்கள் பலரும் மிகப்பெரிய துயரத்தை எதிர்கொண்டு இருந்தனர். பலரின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டது. அதேநேரத்தில், வைரஸ் பரவலில் இருந்து தப்பிக்க முகக்கவசம் பயன்படுத்துவது, லேசான அறிகுறி இருந்தாலே உடல்நல பரிசோதனை செய்வது, வெளியில் சென்று வரும்போது சானிடைசர் பயன்படுத்துவது நல்லது. இதனால் தொற்று பரவல் விகிதம் கட்டுப்படும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றன. 

தற்போதைய நிலையில் இந்தியாவில் ஊரடங்கை அமல்படுத்த எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.

இதையும் படிங்க: புத்தாண்டு கொண்டாட்டம்; காண்டம் அமோக விற்பனை.!