"விளையாட்டு வினையானது" - 14 வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் மரணம்; நெஞ்சை ரணமாக்கும் சோகம்.! 



in UP Noida 14 Year Old Boy Died 

பால்கனியில் சிறுவனுக்காக காத்திருந்த எமன், நொடியில் அவரின் உயிரை பறித்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

உத்திரப்பிரதேசம் மாநிலம், நொய்டா, பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 14 வயது சிறுவன் வசித்து வருகிறார். சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். 

பால்கனியில் விளையாட்டு

சிறுவன் வெள்ளிக்கிழமையான நேற்று, மதியம் தனது வீட்டின் பால்கனியில் இருந்துள்ளார். அப்போது விளையாடியதாக தெரியவருகிறது. பால்கனியில் சிறுவன் விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். 

இதையும் படிங்க: திருமணமான 5 நாளில், புதுமணப்பெண்ணின் உயிரை காவு வாங்கிய எமன்; வாட்டர் ஹீட்டர் வெடித்து பலி.! 

பரிதாப மரணம்

14 வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து சிறுவன் கீழே விழுந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: துருப்பிடித்த இரும்பு கேட்.. பள்ளிக்குள் நுழைந்த 13 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய சோகம்..! கண்ணீரில் பெற்றோர்.!