தலை துண்டித்து 20 வயது இளைஞர் பலி., சாகுற வயசா இது?.. ரீல்ஸ் மோகம் யாரை விட்டது? 



in Uttar pradesh Agra Slow Motion Reels Video Death 

 

ரீல்ஸ் மோகம் காரணமாக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் ஆக்ராவில் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் முகம்மது ஆசிப் (வயது 20). இவர் நகைக்கடையில் வெள்ளிப்பொருட்கள் செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: பெண்ணின் கைவிரலை நள்ளிரவில் கடித்த இளைஞர் அடித்துக் கொலை.. துள்ளத்துடிக்க அரங்கேறிய பயங்கரம்.!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அவ்வப்போது சில ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வணிக வளாகம் ஒன்றின் 4 வது மாடியில் அவர் இருந்தார். 

தவறி விழுந்தவர் மரணம்

அப்போது, ரீல்ஸ் வீடியோ எடுத்த நிலையில், ஒவ்வொரு மாடியிலும் துவாரம் அமைக்கப்பட்டு, அவை இரும்பு சட்டங்கள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. ரீல்ஸ் மோகத்தில் இருந்த ஆசிப், மெதுவாக நடனமாடுவதுபோன்ற வீடியோ எடுக்க முற்பட்டுள்ளார். 

அச்சமயம், அவர் இரும்பு சட்டங்களை தூக்கிக்கொண்டு, அதனுள் செல்வதுபோல தோன்றிய நிலையில், நான்காவது தளத்தில் இருந்து தவறி விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் தலைகீழாக விழுந்து, தலை துண்டிக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

காவல்துறை விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆசிப்பின் இறுதி நிமிட காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

இதையும் படிங்க: சிறுநீர் கலந்து சப்பாத்தி: முதலாளி குடும்பத்தை பழிவாங்க பணிப்பெண் அதிர்ச்சி செயல்.. ஆடிப்போன குடும்பம்.!