மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக சைபர் மோசடி முயற்சி; ஆசிரியை மாரடைப்பால் மரணம்..!
தனது மகள் பாலியல் வழக்கில் சிக்கியதாக மிரட்டப்பட்ட நிலையில், பதறிப்போன தாய் மாரடைப்பால் காலமானார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா மாவட்டம், அச்சனீரா அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருபவர் மாலதி வர்மா (வயது 58). இவருக்கு மகள் ஒருவர் இருக்கிறார்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; கல்லூரி பேராசிரியர் மாரடைப்பால் மரணம்.!
இந்நிலையில், நேற்று மாலதிக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களை காவல் அதிகாரிகள் என அறிமுகம் செய்து பேசியுள்ளனர். வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு பேசியவர்கள், உங்களின் மகள் பாலியல் வழக்கில் சிக்கி இருக்கிறார்.
அவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.1 இலட்சம் 15 நிமிடங்களுக்குள் வழங்க வேண்டும் என மிரட்டி இருக்கின்றனர். இதனால் அதிர்ந்துபோன பெண்ணை மேலும் பதறவைக்க, மறுமுனையில் பெண் ஒருவர் அம்மா காப்பாற்றுங்கள் என அலறுவதைப்போல பேச வைக்கப்பட்டுள்ளது.
பதற்றத்தில் சோகம்
இதனால் தனது மகள் எங்கோ சிக்கிக்கொண்டார் என தாய் பதறிப்போன நிலையில், அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை நெஞ்சை பிடித்தவாறு வீட்டின் வாசலிலேயே சரிந்து விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தபோது அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. மேலும், அரைகுறையாக அவர் இறுதி தருவாயில் கூறியதை கேட்டு செல்போனை ஆய்வு செய்தபோது, மோசடி அழைப்பால் அவர் பதற்றத்தில் மாரடைப்பை எதிர்கொண்டு பலியானது தெரியவந்தது.
இதையும் படிங்க: இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி கொலை.. சதித்திட்டத்தில் மாஸ்டர் மைண்ட்.. கணவர் பகீர் செயல்.!