ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் சோகம்; கல்லூரி பேராசிரியர் மாரடைப்பால் மரணம்.!



Kerala Kochi College Staff Dies by Heart attack 

கேரளா மாநிலத்தில் தற்போது ஓணம் பண்டிகையானது களைகட்டி இருக்கிறது. அங்குள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ள நிலையில், கல்லூரிகளில் மாணவ-மாணவியர்கள் சார்பில் ஓணம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொச்சியில் செயல்பட்டு வரும் கல்லூரியில், செப்டம்பர் 11 ம் தேதியான நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அச்சமயம் கல்லூரி பேராசிரியர் மாணவர்கள் கண்முன் பரிதாபமாக உயிரிழந்தார். 

மாரடைப்பு ஏற்பட்டு மரணம்

தொடுபுழா பகுதியில் வசித்து வரும் ஜேம்ஸ் ஜார்ஜ் (வயது 38), தனியார் கல்லூரியில் வணிகவியல் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கல்லூரியில் நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்றார். 

இதையும் படிங்க: முற்றிப்போன ரீல்ஸ் மோகம்; இளம் தம்பதி, 3 வயது குழந்தை உடல் சிதறி பலி.!

அச்சமயம், எதிர்பாராத விதமாக ஜேம்ஸ் மாரடைப்பு ஏற்பட்டு மாணவர்கள் முன்னிலையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். 

அங்கு ஜேம்ஸ் ஜார்ஜ் வரும்போதே பரிதாபமாக உயிரிழந்தார் என்பதை உறுதி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: தொண்டைக்குள் பலூன் சிக்கி சோகம்; 13 வயது சிறுவன் பரிதாப பலி.!