மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்சூரன்ஸ் பணத்திற்காக மனைவி கொலை.. சதித்திட்டத்தில் மாஸ்டர் மைண்ட்.. கணவர் பகீர் செயல்.!
திருமணம் முடிந்த கையுடன் மனைவியின் மீது பாசமாக இருப்பது போல பாவித்து இன்சூரன்ஸ் எடுத்த கணவர், அதனை வைத்து வங்கிகளில் கடன் வாங்கி, இறுதியில் இன்சூரன்ஸ் பணம் ரூ.50 இலட்சத்திற்காக மனைவியை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
ஆயுள் காப்பீடு திட்டம்
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, கஞ்சன்பூர் பகுதியில் வசித்து வருபவர் அபிஷேக் சுக்லா (வயது 32). இவரின் மனைவி பூஜா யாதவ் (வயது 28). தம்பதிகளுக்கு கடந்த 2022, ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணமான ஓராண்டுக்குள் சுக்லா தனது மனைவி பூஜாவின் பெயரில் ரூ.10 இலட்சம் கடன் வாங்கி 4 கார்கள், 2 இருசக்கர வாகனத்தை தவணையில் வாங்கி இருக்கிறார். பூஜாவின் பெயரில் ரூ.50 இலட்சம் ஆயுள் காப்பீடு திட்டத்தையும் பெற்றுள்ளார்.
சதித்திட்டம்
ஆயுள் காப்பீடு திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் ரூ.50 இலட்சம் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டவர், தனது மனைவியை கொலை செய்ய சதித்திட்டமும் தீட்டி இருக்கிறார். இதனையடுத்து, கடந்த மே மாதம் 2023 ல் மாமனார் ராம் மிலன், மருந்து வாங்க பூஜாவை வெளியே அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: டேய் வலிக்குதுடா ப்ளீஸ்... முரட்டுத்தனமான உடலுறவு.!! பரிதாபமாக பலியான 23 வயது பெண்.!!
பூஜா கொலை
இருவரும் வெளியே சென்றபோது கார் பூஜாவின் மீது மோதியதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கார் ஓட்டுநர் தீபக் வர்மாவை அதிரடியாக கைது செய்தனர். பூஜாவின் பெயரிலேயே காப்பீடு விண்ணப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், அதனை பெறவும், வாகன கடன், நிதிக்கடன் வாங்கியதை முடித்துக்கொள்ளவும் சுக்லாவின் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதிகாரிகள் சந்தேகம்
இதனால் காப்பீடு நிறுவன அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சுக்லாவின் சதித்திட்டம் அம்பலமானது. இந்த விசயத்திற்கு சுக்லாவின் தந்தையும் உடந்தையாக இருக்கவே, அதிகாரிகள் குல்தீப் சிங் (வயது 27), திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை கூறிய வழக்கறிஞர் அலோக் (வயது 38), ட்ரைவர் தீபக் வர்மா (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். எஞ்சிய குற்றவாளிகளான பூஜாவின் கணவர் அபிஷேக், மாமனார் ராம் உட்பட 3 குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்.!! 13 வயது மகள் கூட்டு பாலியல் பலாத்காரம்... தந்தை, நண்பர் கைது.!!