பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகை காஜல் அகர்வால் என்ன சொல்லிருக்கார் பாருங்க.
திருமணமான 15 நாட்களில் கணவர் கொடூர கொலை; கள்ளக்காதல் உறவுக்கு ஆசைப்பட்டு 22 வயது மனைவி அதிர்ச்சி செயல்.!

கள்ளக்காதல் உறவு காரணமாக கணவரை, திருமணம் செய்த 15 வது நாளில் மனைவி தீர்த்துக்கட்டிய சம்பவம் உபியில் நடந்துள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அனுரியா மாவட்டம், கிராமத்தில் வசித்து வருபவர் திலீப் யாதவ் (25). இவரின் மனைவி பிரகதி யாதவ் (22). தம்பதிகளுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதனிடையே, வெளியே சென்ற திலீப் யாதவ், மர்ம நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திலீப்பின் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், திலீப்பின் மனைவி மீது சந்தேகம் திரும்பியது.
இதையும் படிங்க: 30 நாட்களில் திருமணம்.. 20 வயது இளம்பெண்ணின் மர்ம மரணம்.. கைகள் கட்டப்பட்டு மரத்தில் தொங்கிய சடலம்.!
அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், திடுக்கிடும் தகவல் அம்பலமானது. அதாவது, ப்ரகதிக்கு உள்ளூரில் வசித்து வரும் அனுராக் யாதவ் என்பவருடன் திருமணத்துக்கு முன்பே உறவு இருந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கள்ளக்காதல் பழக்கம்
2 ஆண்டுகளுக்கு முன்பு அனுராக் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்தாலும், இருவரும் கள்ளக்காதல் உறவை தொடர்ந்து வந்துள்ளனர். இதனிடையேதான், பிரகதிக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனால் கள்ளக்காதல் உறவுக்கு திலீப் இடையூறாக இருப்பதாக கள்ளக்காதல் ஜோடி எண்ணியுள்ளது.
தனது கள்ளகாதலர் அனுராக்கிடம் தனது நகைகளை கொடுத்த பிரகதி, ரூ.1 இலட்சம் பணத்தை ஏற்பாடு செய்து கூலிப்படையை தயார் செய்ய கூறியுள்ளார். அதன்பேரில் அனுராக் கூலிப்படையை சேர்ந்த நபருக்கு ரூ.2 இலட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் மனைவியின் கள்ளக்காதலுக்கு பலியான அதிர்ச்சி சம்பவம் அம்பலமானது. மனைவி கணவரை 15 துண்டுகளாக வெட்டி கொலை செய்து, உடலை சிமெண்ட் ஊற்றி தொட்டியில் வைத்திருந்தார். இந்த சூழ்நிலையில் அடுத்ததாக அதிர்ச்சி கொலை சம்பவம் நடந்து இருக்கிறது.
இதையும் படிங்க: இளம்பெண் பலாத்கார முயற்சி & கொலை.. ஆட்டோ ஓட்டுநர் என்கவுண்டரில் பலி.!