நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
இளம்பெண் பலாத்கார முயற்சி & கொலை.. ஆட்டோ ஓட்டுநர் என்கவுண்டரில் பலி.!

பெண்ணை வன்கொடுமை செய்ய முயற்சித்து, கொலை செய்த குற்றவாளி என்கவுண்டரில் போட்டுத்தள்ளப்பட்டார்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் அஜய் திவேதி. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவரின் சகோதரர் தினேஷ். இருவரின் மீதும் மொத்தமாக 45 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
பெண் பலாத்காரம் முயற்சி & கொலை
இந்நிலையில், சம்பவத்தன்று அஜய் திவேதி தனது ஆட்டோவில் வந்தபோது, மாலிகாபாத் பகுதியில் பெண் ஒருவர் தேர்வெழுதிவிட்டு வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அவருக்கு உதவுவதாக கூறிய அஜய், தனது ஆட்டோவில் அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டார். இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை, இருவரும் சேர்ந்து கழுதைநெரித்துக்கொலை செய்தனர்.
இதையும் படிங்க: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை; ஆபாச படம் காண்பித்து எஸ்.ஐ அதிர்ச்சி செயல்.!
குற்றவாளி என்கவுண்டர்
இந்த விசயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்த்துறையினர் குற்றவாளிகளான அஜய், தினேஷ் ஆகியோரை தேடி வந்தனர். குற்றவாளி அஜய் காவல்துறையினர் வசம் தப்பிச்செல்ல முற்பட்டபோது என்கவுண்டர் செய்யப்பட்டார். இதில் அவர் உயிரிழந்தார். தினேஷ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பாலியல் வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்தவர், பெண்ணை கொலை செய்ததால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: என் புருஷன் மேலே நீ எப்படி கலர் பூசுவ? மாமியார் - மருமகள் சண்டையில் பறிபோன உயிர்.!