Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
40 வயதில் கல்யாணம்.. மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்..! குமுறலில் மாப்பிள்ளை.!
திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்த மணமகனுக்கு, மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் பகுதியில் 40 வயதுடைய கமலேஷ் என்ற நபர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருந்த நிலையில், அவர் இயற்கை எய்திவிட்டார்.
இதனால் தனியாக வசித்து வந்த கமலேஷ், துணை வேண்டும் என விரும்பி வரன் தேடி இருக்கிறார். இதற்காக திருமண தரகர் ஒருவர் உதவியுடன், இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கள்ளக்காதலிக்காக கர்ப்பிணி மனைவியை பலிகொடுத்த கணவன்.. திருமணம் முடிந்தும் தொடர்ந்த காதல்..!
மணமகன் குடும்பத்தினர் விரக்தி
மண்டபத்தில் திருமண வைபோவங்கள் நடைபெற்றபோது, கழிவறை சென்று வருவதாக கூறிய மணமகள், திடீரென நகை மற்றும் பணத்துடன் தப்பி ஓடி இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த மணமகன் குடும்பத்தினர், திருமண செலவுகள் அனைத்தும் வீணாகி விட்டதாக விரக்தி தெரிவித்தனர்.
மேலும், 40 வயது மணமகன் தற்போது தனக்கு திருமணம் நடைபெறும் என நினைத்தேன். முதல் மனைவியை இழந்து வசித்து வந்த எனக்கு ஏஜென்ட் மூலமாக பெண் தேடினார்கள். தற்போது இந்த சோகம் நடந்துள்ளது என கூறியிருக்கிறார். .
இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. நேரில் வந்த காதலி.. நிகழ்ந்த சம்பவத்தில்.. இறந்த காதலன்.!