ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
கள்ளக்காதலிக்காக கர்ப்பிணி மனைவியை பலிகொடுத்த கணவன்.. திருமணம் முடிந்தும் தொடர்ந்த காதல்..!
கர்ப்பிணி மனைவியை வால்கிங் செல்லலாம் என கணவர் அழைத்துச்சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம், ககோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹசன்பூர் பக்சவா கிராமத்தில் வசித்து வருபவர் விஷால். இவரின் மனைவி ஹிமான்ஷி. தம்பதிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்போது ஹிமான்ஷி கர்ப்பமாக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: "என் மனைவி கேக்குதா உனக்கு.." கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்.!! கணவன் எடுத்த கொடூர முடிவு.!!
கர்ப்பிணி பலி
இதனிடையே, கடந்த டிசம்பர் 29, 2024 அன்று, இரவு நேரத்தில் கர்ப்பிணி மனைவியை வால்கிங் செல்லலாம் என அழைத்துச் சென்ற விஷால், அவரை சச்சுரா கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். கால்வாயில் சென்ற நீரின் பிடியில் சிக்கிக்கொண்ட ஹிமான்ஷி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக, ஹிமன்ஷியின் தந்தை ரஞ்சித், அங்குள்ள காவல் நிலையத்தில் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹிமான்ஷியின் உடலை தேடிவந்த நிலையில், நேற்று அதனை மீட்டனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை
மறுபுறம் விஷாலிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், முதலில் அவர் நாடகமாடி இருக்கிறார். பின் அவரின் பேச்சில் மர்மம் இருப்பதாக கண்டறிந்த காவல்துறையினர், விஷாலிடம் தீவிர விசாரணையை முன்னெடுத்தனர். அப்போது, கர்ப்பிணி மனைவியை விஷால் கொலை செய்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்த அதிர்ச்சியும் அம்பலமானது.
அதாவது, விஷாலுக்கு திருமணத்திற்கு முன்பாக உள்ளூரில் வசித்து வரும் ஹேமா என்ற பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. இவர்களின் காதலுக்கு இருதரப்பு எதிர்ப்பு கிளம்பி, விஷாலை பெற்றோர் வற்புறுத்தி ஹிமான்ஷியை திருமணம் செய்ய வைத்துள்ளனர். திருமணம் முடிந்தபினரும் விஷால் - ஹேமா காதல் தொடர்ந்தது. ஜோடி அவ்வப்போது தனிமையிலும் சந்தித்து வந்திருக்கிறது.
மூவர் கைது
இதனிடையே, ஹேமாவுடன் வாழ நினைத்த விஷால், கர்ப்பிணி மனைவியை கொலை செய்த ஹேமா, தனது நண்பர் பர்தீனின் ஆகியோரின் உதவியுடன் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார். இந்த உண்மையை அறிந்த காவல்துறையினர், விசாரணைக்கு பின்னர் விஷால், ஹேமா, பர்தீனின் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: காம வெறி பிடித்த மாமனார்... ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் படுகொலை.!!