திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெண்ணுடன் ஜூஸ் குடிச்சது தப்பா?.. சிறுவனை கடத்தி வெளுத்தெடுத்த தந்தை.. கதறலோ கதறல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், புத்தூர் பகுதியில் வசித்துவரும் தம்பதிக்கு 17 வயதுடைய மகன் இருக்கிறார். சிறுவன் தன்னுடன் பள்ளியில் பயின்று வரும் 14 வயது சிறுமியுடன் நட்பு ரீதியாக பேசுவது வழக்கம்.
இந்நிலையில், சம்பவத்தன்று கடைக்கு வந்த சிறுமியும், அவரின் நண்பருமான 17 வயது சிறுவன் இணைந்து ஜூஸ் குடித்து இருக்கின்றனர். சிறுமியின் தந்தை வழக்கறிஞர் என கூறப்படும் நிலையில், அவருக்கு இவ்விஷயம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இளைஞரின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல நடுரோட்டில் அறுத்த இளைஞர்; பதறவைக்கும் சம்பவம்.!
சிறுவனை கடத்திய சிறுமியின் உறவினர்கள்
இதனையடுத்து, சிறுவனை சிறுமியின் தந்தை பிராஜ் நாராயணன் தனது சகோதரர்களுடன் சேர்ந்து கடத்திச்சென்று, பண்ணை வீட்டில் வைத்து கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும், சிறுவனின் பெற்றோருக்கும் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பதறிப்போன பெற்றோர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சிறுவனை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். மேலும், சிறுவனை கடத்தியதாக சிறுவனின் தந்தை மற்றும் அவரின் சகோதரர்கள் மீது புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் தரப்பில் இருந்து சிறுவன் சிறுமியை கடத்தி சென்றாக புகார் அளிக்கப்பட்டு, சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாலையில் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல்.. நிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!