திருமணம் முடிந்த 4 வது நாளில் கணவனுக்கு பால் ஊற்றிய மனைவி; கல்யாண பரிசாக சிறைவாசம்.!



 in Gujarat Ahmedabad Wife Killed Husband After Marrying 4 Days 

காதல் மீது உறுதியாக இருந்த இளம்பெண், கணவரை கொலை செய்து காதலருடன் ஓட்டம் பிடித்த கையுடன் கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்தவர் பாவிக். காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் பாயல். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது. சனிக்கிழமையில், காந்தி நகருக்கு மனைவி பாயலை அழைத்துக்கொண்டு கணவர், உடன் சென்றுள்ளார். 

பதறிய பெற்றோர்

தம்பதிகள் இருவரும் திட்டமிட்டபடி காந்தி நகருக்கு செல்லவில்லை. இதனால் பாயலின் தந்தை தொடர்பு கொண்டபோது, இருதரப்பு குடும்பத்தினரும் இவர்கள் எங்கு சென்றார்கள் என தெரியாமல் தவித்துப்போயினர். தம்பதிகளை பல இடங்களில் தேடி அழைத்துள்ளனர். 

இதையும் படிங்க: "அப்பாவை அம்மா செங்கலால அடிச்சிச்சு" - 5 வயது சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்.. வசமாக சிக்கிய தாய்.!

புதுமணப்பெண் கைது

இவர்களை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற காவல்துறையினர், தம்பதிகளை தேடி வந்தனர். இதனிடையே, பாவிக்-கின் இருசக்கர வாகனம், சாலையோரம் கிடந்தது. இதன்பேரில் பாயல் பிடிக்கப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது.

Murder

காதல் கைகூடாததால் விரக்தி

அதாவது, பாயலுக்கும் - அவரின் உறவினர் கல்பேஷ் என்பவருக்கும் இடையே காதல் உறவு இருந்துள்ளது. இவர்கள் திருமணம் செய்யலாம் என இருந்த வேளையில், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக பாயல் - பாவிக் திருமணம் நடைபெற்றுள்ளது. எனினும் காதலில் உறுதியாக இருந்த பாயல், பாவிக்கை கொலை செய்து புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என திட்டமிட்டுள்ளார். 

மாமனார் வீட்டிற்கு செல்லும் வழியில் சோகம்

இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று மாமனாரின் வீட்டிற்கு மனைவியை அழைத்துச் சென்ற பாவிக், வழியில் கல்பேஷ், அவரின் 2 நண்பர்கள், பாயல் ஆகியோரால் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கால்வாயில் வீசியதும் தெரியவந்தது. இதனையடுத்து, உடலை தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், குற்றவாளிகளான பாயல், கல்பேஷ், அவரின் நண்பர்கள் 2 பேர் என 4 பேரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணியை 3 துண்டாக வெட்டிக்கொலை; நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்.!